வியாழன், டிசம்பர் 29, 2011

தேர்தல் ஸ்பெஷல்


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

தேர்தல் ஸ்பெஷல்


உலமாக்களுக்கும் இலவச சைக்கிள்.

கடந்த அக்டோபர் 18> 2010ல் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்து அதற்காக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கி அதற்காக சென்னை ஜார்ஜ் கோட்டையில் விழா நடத்தி அதில் முதல் கட்டமாக 200 பூசாரிகளுக்கு தமிழக முதல்வர் அவர்களே நேரடியாக சைக்கிள் வழங்கினார்.

இந்த விழாவில் முதல்வருடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மட்டுமல்லாமல் சட்டத்துறை அமைச்சரிலிருந்து> ஊரகத் தொழில் துறை அமைச்;சர் வரை ஏராளமான அமைச்சர்களுடன் அரசின் உயர் அதிகாரிகள் வரை கலந்து கொண்டு நாங்கள் உங்களுக்காக மட்டும் தான் இயங்குகிறோம் என்பதை சூசகமாக அறிவித்தனர்.

தகவலறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தமிழகத்தில் உள்ளப் பள்ளிவாசல்களில் குறைந்த சம்பளத்தில் இறைப் பணியாற்றும் இமாம்களுக்கும்> மோதினார்களுக்கும் இதேப்போன்று இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்பொழுது எழுப்பியக் கோரிக்கையை ஓட்டு அறுவடையை கருத்தில் கொண்டு பள்ளிவாசல்களில் இறைப் பணியாற்றும் இமாம்களுக்கும்> மோதினார்களுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்படும் என்று இப்பொழுது அறிவித்துள்ளது. 

அதேப் போல் அருந்ததிய சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை கண்காணிப்பதற்காக அரசே விஷேசக் குழுவை முன்வந்து நியமித்தது.

முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை கண்காணிப்பதற்காக குழுவை நியமிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டதிலிருந்தே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து அரசைத் வலியுருத்தி வந்தது.

ஜனவரி 27 சென்னை> மதுரை பாபர் மஸ்ஜித் முற்றுகைப் போராட்டத்தின் பெருந்திரளான மக்களைக் கண்டு அறண்டுப் போன அரசு முஸ்லீம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீடு முறையாக அமல் படுத்தப்படுகிறதா? என்பதைக் கண்டறியக் குழுவை நியமிப்பதாக இப்பொழுது அறிவித்துள்ளது.

இதுதான் அரசியல்வாதிகளின் பண்பு என்பதை ஆரம்பத்திலிருந்தே நன்றாக அறிந்து வைத்திருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத் தேவைகளை வென்றெடுக்க தேர்தலே சரியாணத் தருணம் என்பதை முடிவு செய்து வைத்திருந்தது.

இதை உள் ஒன்றுப் புறம் ஒன்று என்றில்லாமல் ''கையில காசு வாயிலத் தேசை'' என்று தெளிவாகப் பிரகடனப் படுத்தவும் செய்தது.

எத்தனைத் தொகுதி என்றுக் கேட்க ஆறு மாதத்திற்கு முன்பே அரசியல் வாதிகளின் வீட்டுக் கதவுகளை தட்டி நிற்கும் அமைப்புகளுக்கு மத்தியில் என் சமுதாயத்திற்காக இத்தனை சதவிகிதம் வாழ்வாதாரம் வேண்டும் என்று ஆறு மாதத்திற்கு முன்பே போஸ்டர் ஒட்டி அரசியல் வாதிகளை தனது அலுவலக கதவைத் தட்ட வைத்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.

சமுதாயத்திற்காக எந்த சலுகையும் பெற்றுத் தராமல் வெறுமனே அரசியல்வாதிகளுக்கு விழா நடத்தி மகுடம் சூட்டி மகிழ்ந்த அமைப்புகளுக்கு மத்தியில் சமுதாயத்திற்கு வாழ்வுரிமைப் போன்ற பலமானக் கோரிக்கையை முன்வைத்து அதற்காக ஓட்டு மட்டும் போடச்சொல்லி பொண்ணாடைப் போர்த்தாமல்> புகழாரம் சூட்டாமல் தனக்கும் தடுத்துக்கொண்டு மக்களையும் தடுத்து நிருத்திய ஒரே அமைப்பு இந்தியாவிலேயே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிற வேறில்லை என்று உறுதியாகக் கூற முடியும்.

அதற்கு உதாரணமாக வருகின்ற தேர்தலுக்காக எந்த அரசியல் வாதிகளிடமும் ரகசியப் பேரம் பேசாமல் 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதற்கான உத்தரவாதத்தை அளிப்பவர்களுக்கே முஸ்லீம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளும் என்று வெட்ட வெளியில் போஸ்டர் ஒட்டியது மிகப்பெரிய உதாணமாகும்.

மார்க்கம் என்றப் பெயரால் சுரண்டப்பட்ட மக்களை ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து விடுவித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசியல் என்றப் பெயரால் மார்க்கம் தடுத்த பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு இயக்க வெறியில் ஊறித் திளைத்திருந்த மக்களை இயக்க வெறிலிருந்து விடுவித்து வலிமை வாய்ந்த வாக்குகளை தனக்காகவும்> தன்னுடைய சகோதரனின்  வாழ்வுரிமைக்காகவும் உதவுவதற்காக மாற்றி அமைத்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

வருகின்ற தேர்தலில் நமது வாக்குகள் மட்டுமே வலிமை வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும் நம்முடைய வாக்குகள் முழுவதுமாக யாருக்குச் செல்கின்றதோ அவர்களே ஆட்சியாளர்களாக முடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

இதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்து விட்டதால் தான் நம்முடைய கோரிக்கைகளை வரிசையாக அறிவிக்கின்றனர் இதன் வரிசையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோரிக்கையாகிய 5 சதவிகித இடஒதுக்கீட்டையும் நிறைவேற்றுவதாக வாக்களித்து அதற்கான உத்தரவாதத்தை அளித்தால் வாக்குறுதி மீறாமல் வாக்கிளிப்போம். 
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்